யாழில் தாக்குதல் நடத்திய ஆசிரியர் கைது! மூக்கால் இரத்தம் வடிந்து மயங்கி விழுந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்.தெல்லிப்பழை மகாஜன கல்லுாரியில் 3 மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் பாடசாலை மாணவர்கள் 3 பேரை அழைத்து தலைமுடி தொடர்பாக விசாரித்ததுடன் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவன் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்ற மாணவன் மயக்கமுற்ற நிலையிலும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரை மிரட்டும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவனின் அண்ணன் அதே பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற விடமாட்டோம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post