யாழில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தீயில் எரிந்து மரணம்! (படங்கள்)

யாழ்ப்பாணம், கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் கார்த்திகேசு திருப்பதி (65) எனும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீமூட்டி உயிரை மாய்த்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். திருப்பதி மாஸ்டர் என இவர் கோப்பாயில் உள்ளவர்களால் அழைக்கப்படுபவர்.

தனிமையில் வசித்து வந்த இவர், இன்று காலை 6 மணிக்கும் நண்பகல் 12 மணிக்குமிடைப்பட்ட நேரத்தில் உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.

வீட்டின் பின்பகுதியில் குப்பை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது.

வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவர் சடலத்தை கண்டு, பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

உயிரிழந்தவரின் மனைவியும் சிறிது காலத்தின் முன்னரே குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post