யாழில் கசிப்பு அருந்திய இளைஞன்! இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு!

இளைஞர் ஒருவர் இரத்த வாந்தியெடுத்து நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் டெனிஸ்டன் (2) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கசிப்பு அருந்திவிட்டு வந்தபோதே இரத்தவாந்தியெடுத்தார் என்றும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் விசாரணைகளில் தெரிய வந்தது.

தீவுப்பகுதிக்கு வன்னிப்பகுதியில் இருந்து கடல் வழியாக கசிப்பு கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Previous Post Next Post