யாழில் காணி மோசடி செய்து விற்பனை! நொத்தாரிசு கைது!!

காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டில் யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு கொடிகாமம் இத்தாவில் பகுதியில் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டிலேயே இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

காணியை மோசடியாக விற்பனை செய்தவர்களும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post