பாரிஸ் நகரின் ஐந்தாவது நிர்வாகப்பிரிவில் சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Val-de-Grâce பகுதியில் place Alfonse Laverton என்ற இடத்தில் அமைந்துள்ள அமெரிக்கன் அக்கடமி (American Academy,) கட்டத்திலேயே வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அது எரிவாயுவினால் ஏற்பட்டது என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன. வெடிப்பினால் எழுந்த தீ அருகே இருந்த கட்டடங்களுக்குப் பரவியுள்ளது.
நகர வாசிகள் இசைத் திருவிழாவைக் (Fête de la Musique) கொண்டாடி மகிழத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் இன்று மாலை 17.00 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குறைந்தது ஏழு பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.மருத்துவக் குழு ஒன்று அந்த இடத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளது. தீயணைப்புப் படையினர் பெரும் எண்ணிக்கையான வண்டி வாகனங்களுடன் அந்தப்பகுதி யில் நிறைந்துள்ளனர். பொலீஸாரும் பெரும் எண்ணிக்கையில் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கன் அக்கடமி கட்டடத்தின் முன் பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இடிபாடுகளிடயே எவராவது சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டடத்தில் உள்ள அலுவலக அறைகளில் இருந்த சிலரும் சிறு காயமடைந்துள்ளனர்.
பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ நகர அதிகாரிகள் சகிதம் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று அவசரகாலப் பணிகளை பார்வையிட்டார்.
வெடிப்பு நடந்த பிரதேசத்தை தவிர்த்துப் பயணிக்குமாறு பாரிஸ் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களைக் கேட்டிருக்கிறது. அருகே அமைந்துள்ள La gare de Port-Royal ரயில் நிலையம் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. RER B வழித்தடத்தில் அது அமைந்துள்ளது.