யாழ்.நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! (படங்கள்)

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று கொடியேற்ற உற்சவம் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நாகபூசணி அம்பாள், பிள்ளையார் மற்றும் முருகபெருமான் சகிதம் வலம்வந்துஅடியவர்களுக்கு அருள்பாலித்தார். இவ் கொடியேற்ற திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா ஜுலை 01 ம் திகதியன்று சப்பரத் திருவிழாவும் ஜுலை 02 ம் திகதியன்று தேர்த்திருவிழாவும் ஜுலை 03 ம் திகதியன்று தீர்த்தோற்சவமும் ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவத்துடனும் நிறைவுபெறவுள்ளது.
Previous Post Next Post