யாழில் வயோதிப பெண்ணின் விபரீத முடிவு

யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் பாய்ந்து வயதான பெண்மணி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் மீசாலை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

மீசாலை பகுதியை சேர்ந்த 65 வயதான கி.நாகேஸ்வரி என்பவரே தொடருந்து தண்டவாளத்தில் படுத்து தன் உயிரை மாய்த்துள்ளார்.

வயது மூப்பின் காரணத்தினால் தனது பிள்ளைகளுக்கு பாரமாக இருப்பதை விரும்பாத காரணத்தினால் உயிரை மாய்த்துள்ளதாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடக்க முடியாத நிலையில் கூனிய நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு தினங்களாக இரவு பகலாக நடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post