யாழில் பெண்ணால் இடம்பெற்ற கோர விபத்து! (படங்கள்)

வட்டுக்கோட்டை - தெல்லிப்பளை வீதி யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகில் கோர விபத்து

இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை செல்லும் பாதையில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் மருத்துவர் ஒருவருடைய காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் யாழ்ப்பாண கல்லூரியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸாரை மீறியும் அதீதவேகமாக பயணித்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post