கனடாவில் தமிழ்க்கடை ஒன்றில் 16 கிலோ தங்கம் திருட்டு! திடுக்கிடும் சிசிரிவி காட்சிகள்!!

கனடாவில் (Canada) தமிழ் பேசும் நபர்களால் இயக்கப்பட்டு வரும் வர்த்தக நிலையம் ஒன்றில் 16 கிலோ தங்கம், இனம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி அந்த வர்த்தக நிலையத்தில் உள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, சம்பவத்தின் போது, கிட்டத்தட்ட 6 நபர்கள் முகமூடி அணிந்த நிலையில் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து அங்கிருந்து தங்கத்திலான பொருட்களை எடுத்து செல்கின்றமை குறித்த சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.


Previous Post Next Post