பிரான்ஸ் - La Chapelle பகுதியில் இருவருக்கிடையே கத்திக் குத்து தாக்குதல்!

La Chapelle பகுதியில் இருவருக்கிடையே இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவருமே காயமடைந்துள்ளனர்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ள போதும், இது தொடர்பான தகவல்களை காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமையே வெளியிட்டுள்ளனர். 

25 மற்றும் 35 வயதுடைய இரு ஆஃப்கான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இரண்டாவது நபருக்கு அடிவயிற்றிலும், தொடைப்பகுதியிலும் காயம் ஏற்பட்டது.

இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்மைய நாட்களில் La Chapelle பகுதியில் இதுபோன்ற தாக்குதல்கள் அகதிகளுக்கிடையே இடம்பெற்று வருவதாகவும், இது கவலையளிப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.
Previous Post Next Post