
குழந்*தைகளும் காப்பாற்றப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளதையடுத்து குறித்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் ஆண் மற்றும் பெண் குழந்*தைகளுடன் கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதி*க்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவர் கண்டு உடனடியாக செயல்பட்டு குழ*ந்தைகளை பறித்து எடுத்துக் கொண்ட நிலையில் தந்தை வாவியில் குதித்ததையடுத்து அங்கு மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
நொச்சிமுனையைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மனைவியின் சகோதரியின் அரவணைப்பில் 3 பிள்ளைகளும் வளர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ தினமான நேற்று மாலை 6.00 மணியளவில் மூத்த பிள்ளையை அங்கு விட்டுவிட்டு இரண்டாவது மூன்றாவது பிள்ளைகளை அங்கிருந்து அழைத்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் ஏற்றி கொண்டு கல்லடி பாலத்துக்கு சென்று பிள்ளைகளுடன் தவ*றான முடி*வெடுக்க முயன்றுள்ளார்.
மனைவியை மாமாங்கத்தைச் சேர்ந்த சப் ஏஜென்சி போ*லி ஆவணங்களை தயாரித்து ஓமான் நாட்டுக்கு அனுப்பியுள்ளதுடன் அவருக்கு அங்கு ஒரு வேலைகளும் வழங்காது ஒரு அறையில் அடைத்து வைத்து சித்*திரவ*தை செய்து வருவதாகவும் மனைவிக்கு கிழமையில் ஒரு நாள் கதைப்பதற்கு மாத்திரம் தொலைபேசியை வழங்குகின்றனர்.
எனவே அவரை மீட்க வேறு வழியில்லாமல் நான் உயி*ர்மாய்*ப்பு செய்து தான் குடும்பத்தை மீட்க முடியும் என்றதனால் இதனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து காத்தான்குடி காவல்துறையினர் பிள்ளைகளையும் குறித்த நபரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.