இன்று நள்ளிரவு முதல் ரயில்கள் ஓடாது!

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இதனால் இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு பிரச்சினைகளை முன்வைத்தே இப் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாகவும் அதேநேரம் தபால் ரயில்களும் சேவையில் ஈடுபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பணிப் பகிஷ்கரிப்புக்கு ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதரவளித்துள்ளனர்.

அரச சேவையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும் ரயில் ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post