பேருந்து-மோட்டார் சைக்கிள் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

பேருந்தும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பிலிருந்து கோப்புலவு ஊடாக வற்றாப்பளை செல்லும் பிரதான வீதியின் பிரம்படிப் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த முல்லைத்தீவு 07 ஆம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பேரம்பலம் கருணாகரன் (வயது-58) என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post