தொலைபேசியினால் வந்த வினை! 15 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!!

காட்டுப் பகுதிக்குள் வைத்து 15 வயது மாணவி ஒருவர் குடுபஸ்தர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் நேற்று (02.10.2019) வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த பகுதியில் வசிக்கும் 15 வயது பாடசாலை மாணவியுடன் அதே பகுதியில் வசிக்கும் 41 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை சில தினங்களாக தொலைபேசி மூலம் உரையாடி வந்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபர் நேற்றுக் காலை 10 மணியளவில் தொலைபேசி மூலம் மாணவியைக் கற்குளம் பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்கு வருமாறு தெரிவித்ததையடுத்து மாணவியும் அப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதன்போது மாணவி மீது குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பிய மாணவி இச் சம்பவம் தொடர்hபில் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இந் நிலையிலேயே மாணவியும் அவரது தந்தையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளனர்.

இருந்தும் சந்தேகநபரான குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Previous Post Next Post