காணாமல் போன முதியவர் கண்டுபிடிக்கப்பட்டார்..!

இரண்டாம் இணைப்பு:-
காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட முதியவர் இன்று சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என்று அவரது சகோதரர் அறிவித்துள்ளார். 

முதலாம் இணைப்பு:-
யாழ்ப்பாணம் நல்லூர், சட்டநாதர் வீதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரைக் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வல்லிபுரம் கங்காதரன் (வயது-69) என்ற வயோதிபரே நேற்று 03 ஆம் திகதி காலையிலிருந்து காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் நாயன்மார்கட்டுச் சந்திப் பகுதியில் இவரைக் கண்டதாகச் சிலர் தெரிவித்துள்ளனர். எனினும் இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவர் சற்று மனநலம் குன்றியவர் எனவும், இவரைக் கண்டால் அவரது சகோதரின் தொலைபேசி  இலக்கமான 077 753 3596 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத் தருமாறும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதியவர் தனது சகோதரியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த பத்துத் தினங்களுக்கு முன் சகோதரி இறந்து நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Previous Post Next Post