வீட்டுப் பொருட்களைத் திருடி கல்வியங்காடு, கட்டபிராய்ப் பகுதிகளில் விற்பனை! மூவர் கைது!!

சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மின்மோட்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் நேற்று கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டர்களும் கைப்பற்றப்பட்டன.

யாழ்ப்பாணம் அரசடி பகுதியைச் சேர்ந்த 20 முதல் 25 வயதுடைய வயதுடைய நபர்களே கைது கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட பொருள்களை கல்வியங்காடு மற்றும் கட்டப்பிராய் பகுதிகளில் கொண்டு சென்று சந்தேக நபர்கள் விற்பனை செய்தமை கண்டறிப்பட்டது. அதனடிப்படையில் அங்கிருந்து திருட்டுப் பொருள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட மூவரையும், யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கைது நடவடிக்கையை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்தனர்.
Previous Post Next Post