புதிய பட்டம் பெற்றார் நடிகர் தனுஷ்! (படங்கள்)

இளைய சூப்பர் ஸ்டார் என பட்டப் பெயருடன் நடிகர் தனுஷின் அசுரன் படம் வெளிவந்துள்ளதாக இணையங்களில் தகவல் பரவி வருகின்றது.

அசுரன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இப் படத்தில் டைட்டில் கார்டில் தனுஷிற்கு இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஆனால் உண்மையில் அவ்வாறான பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை என்று உறுதியாகியுள்ளது.

முன்னதாக அசுரன் படத்துக்குப் பனர் வைக்க வேண்டாம் என்று அகில இந்திய தனுஷ் தலைமையில் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தனுஷ் பெயருக்கு முன்பாக இளைய சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post