இஸ்லாமுக்கு மாறியவராலேயே பிரான்ஸ் பொலிஸார் மீது தாக்குதல்! (வீடியோ)

பிரான்ஸ், பரிஸ் பொலிஸ் தலைமையகத்திற்குள் நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தாக்குதலாளி உள்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர். 

இத் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தாக்குதல் நடத்திய அதிகாரி 45 வயதுடையவர் என்பதுடன், அவர் 25 வயதிலேயே பொலிஸ் பணிக்குச் சேர்ந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

20 வருடங்கள் பொலிஸ் துறையில் அனுபவம் கொண்ட குறித்த அதிகாரி, நேற்றைய தினம் ஒரு மணியளவில் 4 ஆம் வட்டாரத்தில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்குள் நுழைந்து அங்கிந்த நான்கு அதிகாரிகளைத் தாக்கியுள்ளார். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் இவருக்கு 9 மற்றும் 3 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

எனினும் இத் தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் தெளிவாக தெரியாத நிலையில் பொலிஸாரின் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

தொடர்புபட்ட செய்தி:- பிரான்ஸ் பொலிஸ் நிலையத்திற்குள் கத்திக் குத்து! 4 பொலிஸார் உயிரிழப்பு!! 

Previous Post Next Post