விமான நிலையத்தில் கேட்ட அந்தக் கேள்வியால் மனமுடைந்த அறந்தாங்க நிஷா!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது நிகழ்ச்சி மூலம் பிரபல்யம் அடைந்தவர்தான் அறந்தாங்கி நிஷா (38).

தற்போது அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இருந்தும் அவர் எதுவித ஓய்வுகளுமின்றி தனது பேச்சுத் திறனால் கலக்கி வருகின்றார்.

நகைச்சுவைக்கு ஆண்கள் தான் என்றிருந்த நிலைப்பாட்டை உடைத்து திரைத்துறையில் முன்னேறி வரும் ஒரு குடும்பப் பெண்.

அந்தவகையில், சமீபத்தில் டுபாய் சென்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய அறந்தாங்கி நிஷா அளித்த பேட்டியில்,

நான் இரு தினங்களுக்கு முன்தான் டுபாயிலிருந்து இங்கு வந்தேன். என்னை விமான நிலையத்தில் பார்த்த அனைவரும் ஏன் இந்த சமயத்தில் பயணம் செய்கின்றீர்கள் எனக் கேட்கின்றனர். அது என் மீது உள்ள அக்கறைதான்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் ரொம்ப தைரியமாக இருக்கின்றேன். வயிற்றில் உள்ள என் குழந்தையும் தைரியமாகத்தான் உள்ளது.

இந்த இடத்துக்கு வர என் வாழ்க்கையில் நான் அதிகம் கஷ்டப்பட்டிருக்கின்றேன். என் கணவன் அரச வேலை பார்த்தாலும் பொருளாதார  ரீதியில் கஷ்டத்தில் தான் இருக்கின்றோம். எல்லா போராட்டத்தையும் மீறி மேலே வருவது அவ்வளவு சுலபம் இல்லை.

என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்துத் தான் நான் ஓடுகின்றேன். சில சமயம் கால்கள் வீங்கும். சேர்வாக இருக்கும். அப்போது நான் நகைச்சுவை செய்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன் என்றார்.

Previous Post Next Post