பிரான்ஸ் பொலிஸார் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது? முழு விபரம்!

பிரான்ஸ், பரிஸ் பொலிஸ் தலைமையகத்திற்குள் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் முற்று முழுதாக பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய அதிகாரியின் முழு பெயர் Mickaël Harpon. (வயது-45). இவர் Gonesse (Val-d'Oise)   நகரில் வசித்து வருகின்றார்.

கண்காணிப்புக் கமராக்களின் பதிவுகளின் படி RER நிலையமான Saint-Michel
நிலையத்தில் அன்று காலை 8.56 மணிக்கு பதிவாகியுள்ளார். அப் புகையிரத்தின் மூலமாகவே அவர் பரிஸ் நகருக்குள் வருகை தந்துள்ளார்.

அதன் பின்னர் இரண்டு நிமிடங்கள் கழித்து 8.58 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்குள் கணனி பாதுகாப்புக்களை முடித்துக் கொண்டு உள் நுழைந்துள்ளார்.

பின்னர் அலுவலகத்தில் இருந்த அவர் மீண்டும் 12.18 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார். அங்கிருந்து அருகில் உள்ள rue Saint-Jacques வீதிக்கு நடந்து சென்றுள்ளார்.

12.24 மணிக்கு அந்த வீதியில் உள்ள கடை ஒன்றில் கத்தி ஒன்றை வாங்கியுள்ளார். 33 செ.மீ. நீளம் கொண்ட அக் கத்தியின் வெட்டும் பகுதி 20 செ.மீ. ஆக இருந்தது.

மீண்டும் அவர் 12.42 மணிக்குத் திரும்பியுள்ளார். 12.51 மணிக்கு தனது அலுவலகப் பகுதிக்கு வந்திருந்த அவர் 12.53 மணிக்குத் தனது முதலாவது தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக அவர் அதிகாரிகளைக் குத்தி தாக்குதலைத் நடத்தியுள்ளார். மொத்தம் 7 நிமிடங்கள் இத் தாக்குதல் நீடித்துள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post