உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற பெண்! விபத்தில் உயிரிழப்பு!! (படங்கள்)

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் வவுனியா பம்பைமடு, பெரியகட்டுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த உழவு இயந்திரத்தில் கணவனும் மனைவியும் பயணம் செய்துள்ளனர். இந் நிலையில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த உழவு இயந்திரம் மதகு ஒன்றுடன் மோதியதில் முற்றாகக் குடைசாய்ந்தது.

உழவு இயந்திரத்திலிருந்து கணவன் தூக்கி எறியப்பட்டிருந்த நிலையில் மனைவி இயந்திரத்தின் கீழ் பகுதியில் சிக்கியுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் உயிரிழந்த குறித்த பெண்ணே உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தார் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்தில் பெரியகட்டுப் பகுதியைச் சேர்ந்த தனுசா (வயது-21) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்தவர் ஆவார்.Previous Post Next Post