யாழில் பேருந்துக்குள் அத்துமீறிய சாரதி, நடத்துனர்! தப்பியோடிய யுவதி!!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்குள் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற சாரதி மற்றும் நடத்துநரால் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார் யுவதி ஒருவர்.

இச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் காரைநகரைச் சேர்ந்த யுவதி பணி முடித்து பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால் அனைத்துப் பயணிகளும் இறங்கி விட, யுவதி மட்டும் வீடு நோக்கித் தனித்து பயணித்துள்ளார்.

இதன்போது பேருந்தின் கதவுகளை மூடிவிட்டு சாரதியும், நடத்துநரும் தன்னுடன் அத்துமீறி நடக்க முயன்றதாக யுவதி முறையிட்டுள்ளார்.

எனினும் கூக்குரல் இட்டு அவர்களிடமிருந்து தப்பித்து பேருந்திலிருந்து குதித்து தப்பியோடி வந்ததாக வீடு திரும்பிய யுவதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யுவதி பணிபுரியும் வர்த்தக நிலையத்திற்கும் பெற்றோர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post