தமிழ் இளைஞன் மீது சிங்கள நபர் தாக்குதல்! ஆட்டோவும் சேதம்!!! (படங்கள்)

காணி எல்லைப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டினால் இளைஞன்; மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த ஆட்டோவும் சேதமாக்கப்பட்டுள்ளது.

வவுனியா பன்றிக்கெய்தகுளப் பகுதியில் நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நயினாமடுவில் வசிக்கும் மனோகரன் டிலக்ஷன் (வயது-24) என்ற இளைஞன் பன்றிக்கெய்தகுளத்தில் உள்ள தனது காணியில் ஆட்டோவை நிறுத்தி விட்டு உணவருந்துவதற்காகக் கடைக்குச் சென்ற சமயத்திலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் காணிக்குள் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவும் சேதப்பட்டுள்ளது.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள இளைஞன் தனது காணிக்கான எல்லைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சிங்கள நபர் ஒருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post