பருத்தித்துறையில் இரு கிராம மக்களுக்கிடையில் மோதல்! இராணுவம் குவிப்பு!!

பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றதால் அப் பகுதியில் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம் மோதல் சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த மோதலில் ஆண், பெண் வேறுபாடின்றி மோதிக் கொண்டதுடன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பெருமளவு பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post