டெங்கு காய்ச்சலால் பெண் ஒருவர் உயிரிழப்பு! (படங்கள்)

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

வலி.மேற்கு பிரதேச செயலக முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், தற்போது பளை பிரதேச செயலக உத்தியோகத்தருமான மூளாயைச் சேர்ந்த சுகன்யா விசாகரட்ணம் (வயது-45) என்பவரே உயிரிழந்தவராவார்.

பளையில் தற்போது வசித்து வரும் இவர், காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந் நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post