பாலியல் தொழில் செய்யும் பரிதாப நிலையில் டிக்டாக் பைத்தியம் சூர்யா! (வீடியோ)

டிக்டாக்கில் லைக்குகளை அதிகம் பெற வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடைகளுடன் தங்களைத் தாங்களே கேவலப்படுத்தி வீடியோ பதிவிட்டு வரும் பெண்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் ரவுடி பேபி சூர்யா.

இவ்வாறு டிக்டாக்கில் வீடியோ பதிவிடுகின்ற காரணத்தினால் கணவன் இவரைப் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் பாலியல் தொழில் செய்யும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் திருந்தி வாழ வேண்டும் என்றால் கடனை அடைக்க 5 இலட்சம் ரூபாய் தாருங்ள் என்றும் நிபந்தனை விதித்த ரவுடி பேபி சூரியாவின் மறுபக்கம் குறித்து விபரிக்கின்றது இந்தச் செய்தி…
யாரும் இல்லாத இடத்தில் ஒற்றை செல்போன் முன்பு நம்மை மந்தியின் வித்தைகளை காட்ட வைக்கும் மந்திரவாதி டிக்டாக்..!

பெண்கள் ஆண்களை விரும்பிச்சென்ற காலம் போய் டிக்டாக்கில் பெண்கள் பெண்களுடன் வீட்டை விட்டு வெளியேறும் கலிகாலம் அரங்கேறி வருகின்றது.

அந்த வகையில் நடிப்பு திறமை என அரைகுறை ஆடையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா என்ற அம்மணி டிக்டாக்கில் மிக பிரபலம்..!

காதல் பாட்டு, குத்து பாட்டு, சோகப்பாட்டு என அம்மணி டிக்டாக்கில் காட்டாத நவரசங்களே கிடையாது.  அம்மணியின் வீடியோக்களுக்கு லைக்குகள் ஏறிக் கொண்டே போக அம்மணி உடுத்தும் ஆடைகள் இறங்கிக் கொண்டே போனது தான் விபரீதத்தின் முதல் சுழி..!

ஒரு மகன் உள்ள நிலையில் சூர்யாவின் இந்த லோக்கல் சேட்டையால் மிரண்டு போய் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அம்மணியை கலாய்ப்பது போல அறிமுகமாகி அம்மணியுடன் நெருக்கமானார் டிக்டாக் கோமாளி ஜிபி முத்து..!

இருவரும் சேர்ந்து டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவுக்கு பிரபலமாகினர். அதன் பின்னர் சூர்யா இழுத்து போர்த்தி நடித்தாலும் ஏராளமான டிக்டாக் ரோமியோக்களுடன் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் அவர்கள் மூலம் பாலியல் தொல்லைகள் அதிகரிக்க டிக்டாக்கில் உள்ள நபர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்து வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிக்டாக் அடிமைகளை அதிரவைத்தார் சூர்யா..!

அந்த வீடியோவில் டிக்டாக்கால் தனது கணவரை பிரிந்தது முதல் தற்போது கோடம்பாக்கத்தில் நண்பர்கள் செய்யும் தொந்தரவுகள் வரை அனைத்தையும் கண்ணீர் மல்க கூறியுள்ளார் சூர்யா.

 அவரது இந்த வீடியோவை பார்த்து பலரும் அவருக்கு உதவி செய்வதாக கூறி ஆறுதலுடன் அறிவுரையும் வழங்கியதால் தன்னுடைய கண்ணீர் வீடியோவை டிக் டாக்கில் இருந்து நீக்கினார் சூர்யா.

 தனக்கு தொடர்ந்து அறிவுரை சொல்லும் டிக்டாக் உத்தமர்களுக்கு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூர்யா அதில் தான் அடக்க ஒடுக்கமாக வாழனும் என்றால் தனக்கு இருக்கும் கடனை அடைக்க 5 லட்சம் ரூபாய் தந்து விட்டு புத்தி சொல்லுமாறு தெரிவித்துள்ளார்.

 இந்த ரவுடி பேபி போல இன்னும் நிறைய பெண்கள் காலம்.. நேரம்… வேலை… உழைப்பு… என அனைத்தையும் விஷ செயலியான டிக்டாக்கில் வீணடிக்கின்றனர்.

டிக்டாக்கிற்கு அடிமையான பெண்கள் சமூகத்தை என்ன மாதியான சீரழிவுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதற்கு அடுத்தடுத்து அரங்கேறும் இது போன்ற விபரீதங்களே சாட்சி..!
Previous Post Next Post