யாழ். பஸ் நிலையத்தில் விபத்தில் சிக்கிய முதியவர் சாவு! (படங்கள்)

நேற்றைய தினம் யாழ்.மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்தில் மோதி படுகாயமடைந்திருந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட பஸ் சாரதி நேற்று மாலை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டபோதும் முதியவரின் உயிரிழப்பின் அடுத்து மீண்டும் இன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சாரதி இன்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தது நீதிமன்றம்.

இதேவேளை உயிரிழந்த முதியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் தொடர்பாக தகவல்கள் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Previous Post Next Post