மரண அறிவித்தல் - செல்வி பொன்னம்பலம் சிவகங்கை

மண்டைதீவு 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வி பொன்னம்பலம் சிவகங்கை நேற்று (08.12.2019) ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம்-வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வியாழாச்சி, இலட்சுமி, மாரிமுத்து, கனகம்மா, விக்கினராஜா, கண்மணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பழனித்துரை, குமாரசுவாமி, சிவசம்பு, சதாசிவலிங்கம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (09.12.2019) திங்கட்கிழமை பிற்பகல் 02 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
0775248549

Previous Post Next Post