மீண்டும் கூட்டுச் சேரும் குண்டக்க மண்டக்கக் கூட்டணி! (படங்கள்)

நகைச்சுவை என்றால் முதலில் நினைவுக்கு வருபவர்தான் நடிகர் வடிவேலு. பிறந்த குழந்தை முதல் கொண்டு தீவிரி சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள் வரை வடிவேலுவைப் பார்த்தாலே சிரித்து விடுவார்கள்.

அந்தளவுக்கு அவரின் நகைச்சுவை கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றால் மிகையாகாது.

ஆனால் நம்தையெல்லாம் அப்படி சிரிக்க வைத்த வடிவேலு விஜயகாந்தோடு பஞ்சாயத்து, சிங்கமுத்தோடு மல்லுக்கட்டு, இயக்குநர் சங்கரோடு பிரச்சினை என தொடர் டென்ஷனிலேயே பட வாய்ப்புக்களை இழந்தார்.

இந் நிலையில், பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த வடிவேலுவை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சந்தித்துள்ளார்.

இதை தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ள நடிகர் பார்திபன், இன்றைய சந்திப்பு நாளைய செய்தியாகலாம் எனப் பதிவு செய்துள்ளார்.

மீண்டும் ஒன்று சேரப் போகிறது குண்டக்க மண்டக்க கூட்டணி என வடிவேலுவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.Previous Post Next Post