மண்கும்பானில் சட்டவிரோத மண் அகழ்வு! களமிறங்கியது கூட்டமைப்பு!! (படங்கள்)

அண்மைய காலங்களில் மண்கும்பான் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந் நிலையில் அண்மையில் இவ்வாறு சட்டவிரோதமாக மண் ஏற்றிய உழவு இயந்திரம் பொதுமக்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் சட்டவிரோத மண் அகழ்;வுகள் இடம்பெறும் மண்கும்பான் பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இவ் விஜயத்தின் போது பொதுமக்களையும் சந்தித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள், இவ்வாறு தீவகம் உட்பட வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கையைத் தாம் எடுக்க உள்ளதாகவும் மக்களிடம் உறுதியளித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் அப் பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

Previous Post Next Post