இனந்தெரியாத நபர்களினால் குடும்ஸ்தர் சுட்டுக்கொலை! (படங்கள்)

இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்ஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று இரவு இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குடும்ஸ்தர் மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலானைப் பகுதியில் தனிமையில் தங்கியிருந்து கூலித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந் நிலையில் இவ் தங்கியிருந்த வீட்டுக்கு முன்பாக இந்தத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த நபர் இரு பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா (வயது-41) எனத் தெரிய வருகின்றது.Previous Post Next Post