நடிகர் அஜித் வீட்டில் திடீர் சோதனை! பரபரப்பாகும் தமிழகம்!! (வீடியோ)

நடிகர் அஜித்துக்குச் சொந்தமான வீட்டில் வனத்துறையினர் இன்று ரெய்டு நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவான்மியூரில் உள்ள அஜித்துக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் பராமரிப்புப் பணிகளில் உதவியாளரான சுரேஷ் சந்திரா உள்ளார்.
இவர் வெறும் உதவியாளர் மட்டுமல்ல, செய்தித் தொடர்பாளர், மேலாளர் என பல பணிகளைக் கவனித்து வருகின்றார்.

அஜித் எங்கே செல்வார் என்பது உள்ளிட்ட அனைத்துப் பயணத் திட்டங்களையும் சுரேஷ் சந்திராதான் செய்வது வழக்கம்.

இந் நிலையில் சமீபத்தில் பத்திரிகைக்கு சுரேஷ் சந்திரா அளித்த பேட்டியில், தான் மலைப்பாம்பு ஒன்றைப் பராமரித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து வனத்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியது. இந் நிலையில் இன்று மதியம் இந்த ரெய்ட்டை சென்னை வனத்துறையினர் நடத்தியுள்ளனர்.
Previous Post Next Post