60 வயது பாட்டி 22 வயது வாலிபனுடன் காதல்! அதிர்ச்சியில் உறைந்த பொலிஸ்!!

காதல் வயப்பட்டவர்களின் வினோதங்கள் சொல்லில் அடங்காதவை. அந்தவகையில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் எட்டுமாடுடாவுலா காவல் நியைத்திற்கு ஒரு வினோதமான முறைப்பாடு வந்தது.

ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டியின் கணவரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

அதாவது, அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனுக்கும் தன் மனைவிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டி, இளைஞன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்தனர்.

மூதாட்டியும் இளைஞனும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் போலீசாரிடம் கூறினர்.

‘இந்த திருமண முடிவு தவறானது. இருவரும் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என குடும்பத்தினர் மற்றும் போலீசார் அறிவுரை கூறினர்.

அதை ஏற்காமல் இருவரும் பிடிவாதம் பிடித்ததால் அந்த இளைஞன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து காதல் ஜோடியை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
Previous Post Next Post