“காணாமல் போனவர்களை முதலைக்கு போட்டாச்சு” தமிழ்ப் பெண்ணின் கருத்தால் குழப்பம்!! (வீடியோ)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் கேட்ட கேள்வியால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

“உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கின்றீர்கள்?” என குறித்த பெண் கேட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டதால் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடத்திய போராட்டத்தின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரைச்சிப் பிரதேச சபைக்கு முன்பாக உள்ள காணி தொடர்பாக சர்ச்சை நிலவி வருகின்றது. அக் காணி தமக்குரியது என பிரதேச சபை குறிப்பிட்டுள்ளது.
எனினும் அது தம்முடைய காணி என தனிநபர் ஒருவர் உரிமை கோரி வழக்குத் தொடர்நதுள்ளார். இவ் விவகாரம் நீதிமன்றில் உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியிருந்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பேரணியாக வந்துஇ குறிப்பிட்ட இடத்தில் சில தினங்கள் பந்தல் அமைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அந்த இடத்தில் போராட்டக்காரர்கள் சென்றபோது காணி உரிமையாளரான அந்தப் பெண் அந்த பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதன்போதே உங்கள் பிள்ளைகளை முதலைக்கு போட்டு விட்டார்கள். இனி வரப் போகிறார்களா? எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என எகத்தாளமாக கேட்டார்கள்.

இதனால் கோபமடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கொந்தளிக்க அந்த இடத்திலிருந்து ஓடித்தப்பினார்.
Previous Post Next Post