உயிர்கொல்லி கொரோனா வைரஸ்! இலங்கையில் இரு பெண்களுக்குத் தொற்றியது?

உயிர் கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாகச் சந்தேகிகக்கப்படும் சீனப் பெண் உட்பட இரு பெண்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற சுவாசத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் சீனாவில் பரவுகின்றது.

சீனாவில் இந்த வைரஸ் காரணமாக ஒரு மாகாணத்தைச் சேர்ந்த மக்களை வேறு மாகாணங்களுக்குச் செல்லாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பாம்புக் காய்ச்சல் என இந்தத் தொற்றுக்குள்ளானதாக நம்பப்படும் இருவர் ஐடிஎச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுத் தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


Previous Post Next Post