யாழில் திருடர்களை மறைத்து வைத்திருந்த தமிழ்ப் பெண் பொலிஸ்! (படங்கள்)

தெல்லிப்பளையில் தமிழ்ப் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருந்த திருட்டுச் சந்தேக நபர்கள் இருவரை மானிப்பாய்ப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.

இந் நிலையில் அவர்கள் இருவரும் தெல்லிப்பபளையில் உள்ள தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அந்த வீடு இன்று நண்பகல் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வீட்டில் மறைத்து வைத்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த இரு மாதங்களுக்கு மேலாகக் கடமைக்குச் சமுகமளிக்கவில்லை. அதனால் அவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post