மனித உயிர்களைக் காவு கொள்ளும் கொரோனா! நேற்று மட்டும் 45 பேர் பலி!!

சீனாவிலிருந்து பரவரப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது பல நாடுகளிலும் பரவி வருகின்றது.

இந் நிலையில் சீனாவில் நிலைமை படுமோசமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு இதுவரை இவ் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளதாக சீனா இன்று காலை உறுதி செய்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் நேற்று மட்டும் புதிதாக 1430 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனாவின் வுஹான் மாகாணம் மிகப் பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு சமாளிக்கத் திண்டாடி வருவதாக ஜிங்குவா நகர மேயர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நோய்க்கான மருந்துகள் மற்றும் போதிய பாதுகாப்பு அங்கிகளுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆயிரக் கணக்கான நோயாளர்களைக் கையாள குறைந்தளவு மருத்துவர்களே உள்ளதால் நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post