காதலியை ஏமாற்றிய தர்ஷனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 இல் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பங்குபற்றி பலரது ஆதரவையும் நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் தர்ஷன் மீது மாடல் அழகியும் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார்.

அத்துடன் இதுவரை தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார் .

இதற்கு விளக்கமளித்த தர்ஷன், ‘சனம் ஷெட்டி தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சனம் ஷெட்டியின் வழக்கறிஞர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பண மோசடி போன்ற குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்றும், இதனால் தர்ஷனுக்கு 7 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என கூறியுள்ளார்.
Previous Post Next Post