தமிழில் மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகளால் பரபரப்பு! (படங்கள்)

இந்தியா தமிழக பொலிஸாருக்கு பயங்கரவாதிகளால் தமிழில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“காத்திருக்கின்றோம், விரைவில் பதிலடி கொடுப்போம்” என்று தமிழில் எழுதி தமிழக கியூ பிரிவு பொலிஸாருக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

 தமிழக கியூ பிரிவு பொலிஸாரும், சிறப்பு புலனாய்வு துறை பொலிஸாரும், பெங்களூர் கிரைம் பிரிவு பொலிஸாரும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாத அமைப்புகளை வேட்டையாடினர்.

இந்த தேடுதல் வேட்டையில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அது போல் டெல்லியில் தீவிரவாதி காஜாமொய்தீன் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் துப்பாக்கிகளுடன் கைது செய்தனர். இதற்கு பயங்கரவாதிகள் உடனடியாக பொலிஸாருக்கு பதிலடி கொடுத்தனர்.

அதன்படி கன்னியாகுமரியில் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த ஜனவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என கருதப்படும் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ட்விட்டரில் ஒரு அதிர்ச்சிகரமான கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கடிதம் தமிழில் வெளியாகி உள்ளது. “அல்ஹந்த்” என பயங்கரவாத இயக்கம் இந்த கடிதத்தை உருவாக்கி உள்ளது.

அந்த இயக்கமானது டெலிகிராம் செயலி மூலம் முதலில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அந்த கடிதம் ட்விட்டரில் போடப்பட்டுள்ளது.

2 நவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுக்கு மத்தியில் தமிழில் அந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அதில் “நாங்கள் காத்திருக்கிறோம். விரைவில் பதிலடி கொடுப்போம்” என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதை தமிழ் தெரிந்த பயங்கரவாதிகள் வெளியிட்டிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Previous Post Next Post