யாழில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு! (படங்கள்)

பாதுகாப்பற்ற கிணறில் தவறி விழுந்த 5 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் அச்சுவேலி வல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஜெகதீஸ்வரன் அட்சயா (வயது-5) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

வெளி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சிறுமியைத் தேடியபோது பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

உடனடியா உறவினர்கள் சிறுமியை மீட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Previous Post Next Post