காதலில் தோல்வியுற்ற யாழ்.மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியில் மாணவன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்கும் சிவகுமார் டினோஜன் (வயது-19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

நேற்றைய தினம் (01.02.2020) வீட்டில் எவரும் இல்லாத நிலையில் அறை ஒன்றில் தொலைபேசி வயர் மூலம் தூக்கில் தொங்கியுள்ளார்.

வெளியில் சென்ற அவரது தாயும், சகோதரியும் வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் இன்று (02.02.2020) மதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.

காதல் தோல்வியாலேயே குறித்த மாணவன் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post