யாழில் பாடசாலை மாணவிகளுக்கு விற்பனை செய்யப்படும் காதலர் தின பொருட்கள்! (படங்கள்)

நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் காதலர் தினப் பொருட்களின் விற்பனைகள் களைகட்டியுள்ளன.

இந் நிலையில் யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள அழகுசாதனைப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் காதலர்களுக்கென பிரத்தியேகமாக விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டு காதலர் தினப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆனால் அவ் விற்பனைக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களைப் பாடசாலை சீருடையுடன் மாணவிகள் நின்று பார்வையிடும் காட்சிகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இருந்தும் இவ்வாறான பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வது சிறுவர், சிறுமிகள் சீரழிவதற்கு வழி வகுக்கும் என அப் பகுதியில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post