தமிழ் அரசியல் கைதிகளைத் திடீரெனப் பார்வையிட்ட ஜனாதிபதி!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பார்வையிட்டுள்ளார்.

கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இன்று மாலை ஜனாதிபதி முன்னறிவித்தலின்றி சென்ற நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகளையும் பார்வையிட்டுள்ளதுடன், அங்குள்ள நிலைமைகளையும் ஆராய்ந்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தார்.

அத்துடன் அங்கு தண்டனை பெற்ற மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர் நடந்து செல்லும் போது பார்வையிட்டார். சிறைச்சாலை அதிகாரிகள் அவருக்கு அடையாளம் காண்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனை பெற்றுள்ள தமது தந்தையை பொதுமன்னிப்பில் விடுவிக்கக் கோரி பிள்ளைகள் இருவர் காத்திருக்கும் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனையும் பார்வையிட்டார். எனினும் தனிப்படச் சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post