கல்வியங்காடு பூதவராயர் குளத்துக்குள் முதலைகள்! மக்களுக்கு எச்சரிக்கை!! (படங்கள்)

கடந்த வருடம் மார்கழி மாதம் பெய்த கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காடு பூதவராயர் குளத்துக்குள் (செங்குந்த குளம்) முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லூர் பிரதேச சபையினாலும் எச்சரிக்கை பதாகை ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கமநல சேவைகள் திணைக்களத்துக்கு இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தெ.கிரிதரன் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அத்துடன் இக் குளத்துக்கு அண்மித்து மக்கள் குடியிருப்புக்கள், பாடசாலைகள், கிராம அலுவலர் அலுவலகம் ஆகியன உள்ளன.
அதிலும் பெரும்பானவர்களுக்கு இக் குளத்துக்குள் முதலைகள் இருப்பது அறிந்திராத நிலையில் ஆபத்தான சூழ்நிலையை தடுக்கும் முகமாக உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post