யாழில் சிறுமி துஷ்பிரயோகம்! அந்தரங்கப் படத்தை வெளியிடுவதாக இளைஞன் அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவரைக் காதலித்து துஷ்பிரயோகம் செய்து அதன் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவேன் என மிரட்டிய இளைஞன் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

வலி.தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமி ஒருவரைக் காதலித்து அவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார் இளைஞன் ஒருவர்.

இதனிடையே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையையடுத்து விடயத்தை வெளியில் சொன்னால் அந்தரங்கப் படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுவேன் என்று இளைஞன். அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமி மேலதிக பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞனை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post