வேகக் கட்டுப்பாட்டையிழந்து வேலியில் மோதிய குடும்பஸ்தர் பலி! (படங்கள்)

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேலி மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.  இந்த சம்பவம் கிளிநொச்சி- வின்சன் வீதி 3ம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் அதே இடத்தைச்சேர்ந்த  சுந்தரம் மகேந்திரம் (வயது-45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post