யாழில் சற்றுமுன் வீதியில் சென்ற நபர் திடீரென விழுந்து மரணம்! (படங்கள்)

யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் வயது-65 என்பவரே உயிரிழந்தவராவார்.

உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து 1990 அம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. உடனடியாக அங்கு அம்புலன்ஸ் வண்டி வந்த போதும் முதியவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.


Previous Post Next Post