வவுனியாவில் விபத்து! நேரில் கண்டவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!! (வீடியோ)

கடந்த 23 ஆம் திகதி வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்.காரைநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் உட்பட ஐவர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த பகுதியில் பேருந்தும் பஜ்ரோ வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்திலேயே இவர்கள் உயிரிழந்திருந்தனர்.

இவ் விபத்துத் தொடா்பில் நேரில் கண்டவா் தெரிவிக்கையில்,

ஐம்பது மீற்றர் இடைவெளியில் வாகனங்களை நிறுத்திவிட்டு எல்லோரும் இறங்கி ஓடினோம். காயப்பட்டவர்களை மீட்டு வைத்திசாலைக்கு அனுப்ப வீதியால் வந்த அனைவருமே உதவினர்.

இருப்பினும் பஜ்ரோ முன் பகுதிக்குள் சிக்கிய இருவரை மீட்க அதிக போராட்டம். ஒரு இசூசு லொறியின் உதவியுடன் பின்பக்கம் இழுத்தபோதும் அம்முயற்சியும் தோல்வியானது.

அப்போது அந்த ஊர் மக்கள் ஓடிச்சென்று அலவாங்கு எடுத்து வந்து, முன் பகுதியை நிமிர்த்தினர். எல்லோரும் பேரூந்தை தூக்கி அசைக்க அலவாங்கால் முன்பகுதியை நிமிர்த்தியவர் முன்பக்கத்தில் இருந்தவரை மீட்டு அம்புலன்சில் ஏற்றி அனுப்பிய பின் சாரதியை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

சாரதி மிக மோசமான நிலையில் கிடந்தார். மீண்டும் பேருந்தை தூக்கி தூக்கி தொடர்சியாக அசைத்து இரு வாகனங்களுக்கும் அடியில் சிக்கி இருந்தவரை மீட்க அனைவரும் முயற்சி செய்தனர்.

அவ்வேளையில் தான் பேருந்து முன் பகுதியின் அடியில் தீப்பற்றிக்கொண்டது. DC மின் கசிவு நிலை மற்றும் எரிபொருள் தன்மைக்கேற்ப எரி நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம். இவ்வாறான சூழல் காப்பாற்ற செல்லும் அனைவருக்குமே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இதனால் அனைவருமே அவ்விடத்தை விட்டு ஓடவேண்டி வந்தது.

சிலர் பேருந்துக்கு தீயிட்டதாக கூறினார்கள். இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை. எது எப்படியோ கண் எதிரே ஒரு மனிதன் ஆபத்தில் சிக்கி பின் எரிவதை கண்களால் காண நேர்ந்த பெரும் துயரம் அவ்விபத்து சம்பவம்.

கவனமின்மை, அலட்சிய போக்கு, அதிக வேகம் இவையே விபத்துக்களுக்கு காரணம்.எதிர் திசையில் வரும் வாகனத்தை கவனிக்காது சிறிய இடைவெளி தூரங்களில் முந்திச்செல்ல முற்பட்டால் இவ்விதமான விபத்துக்கள் தவிர்க்க முடியாததாய் ஆகிவிடும்.

நமது அவதானமும், நிதானமுமே நம்மை காப்பாற்றும்.மேலும் நாளாந்தம் கூலி வேலைக்காய் சென்று வீடு திரும்பும் பலர் அவர்கள் வீடு வந்து சேர்ந்த பின்னாலே எரியும் அடுப்பு ஏழ்மை வறுமை என மன உலைச்சலுடன் செல்லும் பலர் யோசனை மிகுதி அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தடுமாற்றம் நிறைந்து வீதியில் போகும் பலர்.

மேச்சல் சென்று வரும் கால்நடைகள் விளையாட்டுத்தனத்தால் வீதிக்கு திடிரென ஓடி வரக்கூடிய சிறுவர்கள். எனவே சாரதிகளே உங்கள் நாடு வெளிநாடல்ல.

நமது நாட்டின் வீதி தன்மைக்கேற்ப 60 முதல் 70முஅ.மட்டுமே அதிக வேகம். இதை யாருமே பின்பற்றுவதில்லை. சாரதிகளே நீங்களும் மனிதர்தான். வாகனத்தில் ஏறுமுன் சற்று உங்கள் குடும்ப நிலையையும் யோசியுங்கள்.

பொறுப்பற்றவர்கள் சாரதிகளாக இருக்காதீர்கள். வறுமையும் துயரமும் நிறைந்த நாடு. வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் வேகமானியின் உச்சியை தொடுவதைவிட யதார்த்தமுடன் முன்னால் போகும் மனிதர்களின் நிலையை சற்று நினைக்க தவறாதீர்கள்.

இவ்விபத்தில் பலியான அனைவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.

Cc – Gnapragasam

Previous Post Next Post