வவுனியா விபத்து! காரைநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நால்வர் உயிரிழப்பு!!

நேற்று மாலை வவுனியாவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான பார் சோமர் என்றழைக்கப்படும் இராமலிங்கம் சோமசுந்தரம் (வயது-83), ஆறுமுகம் தேவராஜா (வயது-62), தேவராஜா சுகந்தினி (வயது-51), தேவராஜா சுதர்சன் (வயது-30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது-24) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்துச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
காரைநகா் வா்த்தகா்

தாயும் மகனும்

வாகனச் சாரதி


Previous Post Next Post