யாழ்.பல்கலை மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை! தற்கொலைக்கு முயன்ற மாணவி!!

ராங்கிங்கிக்கு உள்ளாக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017 ஆம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கடுமையான முறையில் ராங்கிங் செய்ய முற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவர்கள் க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றனர்.

இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் பயத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மாணவியின் தந்தை மாணவியிடம் விசாரித்த போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவி உட்ப பல மாணவிகளிடம் 2017ம் ஆண்டு மாணவர்கள் இவ்வாறான கேவலங்களை புரிந்துள்ளார்கள். மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

தாங்கள் சொல்வதை எல்லாம் செய்யச் சொல்லியும் வாட்சப் குறுாப் உருவாக்கி அவர்களின் புகைப்படங்களை அதற்குள் போடச் சொல்லி தொல்லைப்படுத்துவதுடன் தனித் தனி அழைப்புக்கள் எடுத்து வட்சப் ஒன்லைனில் நிர்வாணமாக நிற்கச் சொல்லுவதாகவும்  குறித்த மாணவி தெரிவித்துள்ளதாக அந்த தந்தை தெரிவித்துள்ளார்.

நாள் தோறும் தொடர்ச்சியாக இவ்வாறான அழைப்புக்கள் குறித்த மாணவி உட்பட்ட ஏனைய மாணவிகளுக்கும் வந்து கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இளம் மாணவிகள் மற்றும் மாணவர்கள் தற்கொலை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தை ஆராயமுற்படும் போது இவ்வாறான பல்கலைக்கழக மாணவா்களின் செயற்பாடுகளும் தற்கொலைக்கு துாண்டும் காரணிகளாக அமைந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவியின் தந்தை தனது மகளுக்கு வந்த பல்கலைக்கழக மாணவர்களின் தொலைபேசி இலக்கங்களை எமக்கு அனுப்பியுள்ளார். அவ்வளவு தொலைபேசி இலக்கங்களும் இங்கு நாம் வெளியிட்டுள்ளோம்.

அத்துடன் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்புக்கள் முயன்றுள்ளன.

இவ்வளவு தொலைபேசி இலக்கங்களின் உரிமையாளர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் எனவும் அதற்காக சமூகநலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் எனவும் மாணவியின் தந்தை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post